ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: தனுசு

தனுசு ராசிக்கு இந்தாண்டு எப்படி இருக்கும்?
Sagittarius
தனுசு ராசி
Updated on
3 min read

கிரகநிலை

ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).

கிரக மாற்றங்கள்

06.03.2026 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்

இந்த வருடம் நீண்ட நாள்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கிப் பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். 

தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கெனவே வியாபாரம் தொடர்பாக பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். தொழில் ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் தொழில் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்திலும் மிகக் கவனமாக இருப்பது அவசியம். புதிய தொழில் ஆரம்பிக்கும்போது அரசாங்கம் சம்பந்தமான தகவல்களைச் சரியான முறையில் கையாள்வது மிகவும் அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். மிகக் கடுமையான பொறுப்புகள் ஏற்படலாம். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். மற்றவர்களுடைய வேலைகளையும் நீங்கள் செய்ய வேண்டிய நிலை வரலாம்.

குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். அமைதி ஏற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்குத் தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பெண்களுக்கு: கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மிகவும் அருமையான வருடம். எந்த ஒரு சூழலிலும் உங்களுக்கு நன்மையே நடக்கும்.

கலைத்துறையினருக்கு: எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண் கவலை உருவாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

அரசியல்துறையினருக்கு: மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்குப் பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு வேலையும் மந்தமாக நடக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, வரும் ஆவணி மாதத்திற்குப் பிறகு உங்களுக்குக் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்வீர்கள். எல்லாவிதமான பாக்கியங்களும் வந்துசேரும்.

மூலம்

இந்த வருடம் பணவரத்து கூடும். ஏற்கெனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும்.

மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம், கவனமாக இருப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சாதகமான பலன் தரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கு, கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

பூராடம்

இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டுச் செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

உத்திராடம் 1ம் பாதம்

இந்த வருடம் கூடுதலாகச் செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி வேலையைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மன நிறைவுக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. எடுத்துக்கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்கக் காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்குக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு - செவ்வாய் - சூரியன்

எண்கள்: 1, 3, 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com