கிரகநிலை
ராசியில் சனி, ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).
கிரக மாற்றங்கள்
06.03.2026 அன்று ராசியில் இருந்து சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.05.2026 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
இந்த வருடம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மனச் சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளைக் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமாக வெளியூர் வெளிநாடு பிரயாணங்கள் ஏற்படலாம். ஏற்கனவே இருந்த தொழில் சிக்கல்கள் அகலும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க உத்தியோகம் செய்பவர்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.
பெண்களுக்கு: யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடைபெறும். எந்த ஒரு ரகசியங்களையும் காப்பாற்றுவது உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
கலைத்துறையினர்: கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு சக கலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வ நிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். புதிய சொத்துக்கள் வந்து சேரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
அரசியல்துறையினருக்கு: மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு: விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அதிகமான முயற்சி என்பது அவசியம்
அவிட்டம் 3, 4 பாதங்கள்
இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். மனதிலிருந்த கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். குடும்பத்திலிருந்த இறுக்கமான நிலை மாறும்.
சதயம்
இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்துக் கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெறத் தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைப் படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்
இந்த வருடம் பணவரவு மனத் திருப்தியைத் தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்ப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி - புதன் - சுக்ரன்
எண்கள்: 5, 6
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.