கிரகநிலை
தனவாக்கு ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என வலம் வருகிறார்கள்
கிரக மாற்றங்கள்
06.03.2026 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.05.2026 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்
இந்த வருடம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாகக் காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டுச் செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வருடம் அவர் மிதமான வளர்ச்சி என்பது இருக்கும் உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். ஆடி மாதத்திற்குப் பிறகு வரக்கூடிய காலகட்டங்களில் வெளிநாடு வாய்ப்புகள் கைகூடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வளர்ச்சி உங்களுக்கு வந்து சேரும்.
குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தனாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு விவாதத்தில் அல்லது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.
பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மிகப் பெரிய லாபங்களை இந்த வருடம் எங்கள் பெறுவீர்கள்.
அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும் நீங்கள் உழைத்த உழைப்புக்கு ஏற்ற மதிப்பு மரியாதை சொல்வாக்கு செல்வாக்கு ஆகியன உயரும்.
மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெறத் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. கல்வியிலிருந்த பொருளாதாரத் தடைகளை அகற்றுவார்கள். படிக்கும்போதே பகுதி நேர வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
புனர்பூசம் 4ம் பாதம்
இந்த வருடம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். உங்களுக்குத் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்கள் தனது எதிர்காலத்திற்காக திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்காக மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
பூசம்
இந்த வருடம் குடும்பத்தில் மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். வாகனங்கள் வாங்குவதிலிருந்த தடை நீங்கும். மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாகச் செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்காகப் பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
ஆயில்யம்
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியிலிருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தைக் குறைப்பது நன்மையைத் தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வ நிலை உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்மனை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்கக் காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன் - சுக்ரன் - குரு
எண்கள்: 2, 3, 6
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.