கிரகநிலை
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).
கிரக மாற்றங்கள்
06.03.2026 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.05.2026 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
இந்த வருடம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களிலிருந்து பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து வந்த இழுபறி நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்னைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையை நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். சிக்கல்கள் எதுவும் உருவானால் அந்தத் துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளைச் செய்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத எண்ணங்கள் ஏற்படலாம் வீண் கோபம் படபடப்பு ஏற்படலாம் அந்த நேரத்தில் பொறுமையைக் கையாள்வது அவசியம்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தைக் காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராகும் மருத்துவ செலவினங்கள் குறையும்.
பெண்களுக்கு: எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளைச் செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.
கலைத்துறையினருக்கு: தொழில் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை.
அரசியல்துறையினருக்கு: அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. சிறு சிறு விஷயங்களில் கூட வாக்குவாதம் ஏற்படலாம் அந்த சமயத்தில் வார்த்தைகளில் கவனம் மிக மிக அவசியம்.
மாணவர்களுக்கு: கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கல்வி சம்பந்தமான விஷயங்களில் இதுவரை இருந்து வந்த தொய்வு நிலை மாறும் ஒரே நேரத்தில் பல விதமான கல்வியை கற்றுக் கொள்ளக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் சில பேருக்கு வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்குப் பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூரப் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.குடும்பத்திலிருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியைத் தரும்.
திருவோணம்
இந்த வருடம் இன்று யாரிடமும் வீண் சண்டையைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து எடுத்துக் கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வெற்றிக்குக் கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வருடம் தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளைக் கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாகச் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி - சுக்ரன் - புதன்
எண்கள்: 6, 7, 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.