

கிரகநிலை
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்
கிரக மாற்றங்கள்
06.03.2026 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.05.2026 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
இந்த வருடம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். தொழில் உத்தியோகத்தில் வரக்கூடிய சிக்கல்களை ஆலோசனை பெற்றுத் தீர்க்க முடியும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையிலிருந்த பணம் கிடைக்கும். மிகக் கடுமையான பொறுப்புகள் சில பேருக்கு ஏற்படலாம். மேல் இடத்துடன் சின்ன சின்ன உரசல்கள் ஏற்படலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையைத் தவறவிடாமல் இருப்பது அவசியம்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் இருப்பதால் வாக்கு கொடுக்கும் போது மிக மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொடுக்கவும். பொருளாதாரத்தில் நல்ல ஒரு வலிமையைப் பெறமுடியும்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். குரு சஞ்சாரத்தால் திருமணமாகாத பெண்களுக்குத் திருமண பாக்கியம் கைகூடி வரும்
கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.
அரசியல் துறையினருக்கு தடைப்பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் பதவிகள் உங்களைத் தேடி வரும்.
மாணவர்களுக்குத் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். கல்வி சம்பந்தமான விஷயங்களில் சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு சுறுசுறுப்பாக இருப்பது அவசியம்
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்ப்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் குறையும். உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தைச் செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி
இந்த வருடம் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். பெண்கள் தனது உற்றார் உறவுகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசும் போது கவனமாகப் பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்
இந்த வருடம் தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாகப் பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மாணவர்கள் பெரியவர்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். எதிர்ப்புகள் விலகும். தடைப்பட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனை வணங்கி வரப் பணவரத்திலிருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்ரன் - செவ்வாய்
எண்கள்: 2, 6, 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.