மே மாத எண்கணித பலன்கள் – 3

மே மாத எண்கணித பலன்கள் – 3
Updated on
1 min read

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சமய சந்தர்ப்பம் அறிந்து காரியங்களை செய்யும் மூன்றாம் எண் அன்பர்களே நீங்கள் நுட்பமாக எதையும் ஆராய்வதில் வல்லவர். இந்த மாதம் மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும். பயணங்கள் தாமதப்படும்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரியதாமதமும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: வியாழன்று நவகிரகத்தில் குருவிற்கு சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்க வாழ்க்கை வளம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com