
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
புன்சிரிப்புடன் எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும்.
வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.
உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு லாபகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பரிகாரம்: திங்கள் கிழமை அன்று யில் நவக்கிரகத்தில் சந்திரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.