ஜூன் மாத எண்கணித பலன்கள் - 7

ஜூன் மாத எண்கணித பலன்கள் - 7
Published on
Updated on
1 min read

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அனைவருடன் நல்லமுறையில் பழகக்கூடிய ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பாராத செலவு உண்டாகும்.

எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம்.

சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். பெண்களுக்கு பணவரத்து தாமதப்படும்.

அரசியல் துறையினருக்கு எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com