5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
புத்திஞானமும் சாமர்த்தியமும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச் செலவு ஏற்படும். முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்திலிருந்து கனிவான செய்திகள் உங்களைத் தேடி வரும்.
குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கருத்து வேற்றுமை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்துறையினர் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை நீங்கும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 7

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 4

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 2

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 1
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


