numerology predictions

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

எண்கணிதப்படி எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
Published on

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சொல்லிலும் செயலிலும் தூய்மை கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்த காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

வாகன லாபம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை  தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும்.

பிள்ளைகள்  வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினர் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  துளசி அர்ப்பணித்து ஐயப்பனை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com