ஜனவரி மாத எண்கணித பலன்கள் - 5

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
numerology predictions
Updated on
1 min read

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடும் திறமை பெற்ற ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் நிலவி வந்த பணப் பற்றாக்குறை நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த  மந்தநிலை மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்களுக்கு அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். அரசியல் துறையினருக்கு யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com