சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்

சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்

மிதுன ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
Published on

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ), சந் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

03-12-2024 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் நிதானமாக விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மிதுன ராசியினரே நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள்.

இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பயணங்களால் பயன் கிடைக்கும். வங்கிகளில் சேமிப்புகள் உயரும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

திருவாதிரை:

தெய்வ காரியங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலம் வீடு சம்பந்தமாக உள்ள முயற்சிகள் கைகூடும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு நிரந்தமாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களது திறமைகளை காட்ட வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவார்கள். தடைப்பட்டு பாதியில் நின்ற தொழில் கட்டுமானம் தற்போது முடிவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளை வசமாக்கும் நூதன கவர்ச்சி தெரியும். அனைவரும் உங்கள் வழிக்கு வருவார்கள். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.

பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com