சித்திரை மாதப் பலன்கள் - துலாம்

துலா ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
சித்திரை மாதப் பலன்கள் - துலாம்
Updated on
1 min read

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

எப்போதும் சதா சிந்தனையுடன் உலா வரும் துலா ராசியினரே நீங்கள் அதை செயல்படுத்துவதிலும் வல்லவர்.

இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும்.

அரசியல் துறையினருக்கு மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

சித்திரை 3, 4 பாதம்:

மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள்.

சுவாதி:

உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படலாம். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு, தென்கிழக்கு திசைகள் அனுகூலம் தரும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:

உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com