
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
21.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் ரண ருண ரோக ஸ்தானமும் அஷ்டம ஸ்தானமும் பலமாக இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். பெண்களுக்கு யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்திராடம்:
இந்த மாதம் முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.
திருவோணம்:
இந்த மாதம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பர செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும்.
அவிட்டம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 04, 05, 06
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.