purattasi month predictions
மாதப் பலன்கள்

ஐப்பசி மாதப் பலன்கள் - ரிஷபம்

எப்படி இருக்கும் இந்த மாதம்..
Published on

கிரகநிலை:

தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

18.10.2025  அன்று  சூரியன்  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  ரண  ருண  ரோக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.  

27.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

03.11.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்ரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

புதிய வேலைக்கு முயற்சி செய்யக் கூடிய ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும். பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பொருள்கள் விற்பனையாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.

குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும்.  சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். புதுத் தெம்புடன் பணியாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொன்னான காலகட்டம். நற்செயல்கள் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். அரசு வேலைகள் செய்யும் போது கவனம் தேவை.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

ரோகிணி:

இந்த மாதம்  காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்:  கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட பணகஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக் 26, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 19, 20; நவ 15, 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com