
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
29.09.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08.10.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10.10.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
மூலம்:
இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பூராடம்:
இந்த மாதம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
உத்திராடம்:
இந்த மாதம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
பரிகாரம்: சரஸ்வதி தேவியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப் 17, 18, 19, அக் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 27, 28
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.