புரட்டாசி மாதப் பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
purattasi month predictions
மாதப் பலன்கள்
Published on
Updated on
1 min read

கிரகநிலை:

ராசியில் சூரியன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

29.09.2025 அன்று  ராசியில்  இருந்து  புதன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

08.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ராசிக்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் பணவரத்து. பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள்.

உத்திரம்:

இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

சித்திரை:

இந்த மாதம் மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 08, 09

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 20, 21, அக் 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com