பஜாஜ் வி15 - நான்கு மாதங்களில் ஒரு லட்சம் வாகனம் விற்று சாதனை

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வி15 வாகனம், அறிமுகமான நான்கு மாதங்களில் 1 லட்சம் எண்ணிக்கை விற்பனையாகி சாதனை புரிந்திருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த
பஜாஜ் வி15 - நான்கு மாதங்களில் ஒரு லட்சம் வாகனம் விற்று சாதனை

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வி15 வாகனம், அறிமுகமான நான்கு மாதங்களில் 1 லட்சம் எண்ணிக்கை விற்பனையாகி சாதனை புரிந்திருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த விமானம் தாங்கிய போர்க்கப்பலான ஐஎன்ஸ் விக்ராந்தின்  மீதங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது இந்த வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. 1971-ம் ஆண்டு, இந்திய - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிபெற பேருதவியாக இருந்த ஐஎன்எஸ் விக்ராந்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டபின், பஜாஜ் நிறுவனம் அதன் Scrap Metal-களை வாங்கி, தனது புதிய மாடலில் ஒவ்வொரு பைக்கிலும் கலந்து தயாரித்தது.  போர்க்கப்பலை நினைவுபடுத்தும் வகையில் V15 என பெயரிட்டு சந்தைப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே சுமார் 20,000 புக்கிங்களை பெற்ற வி15-க்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.  மே மாதத்தில் 31,848 எண்ணிக்கையளவிலும், ஜூன் மாதத்தில் 26,482 எண்ணிக்கையளவிலும் விற்பனை ஆகியிருக்கிறது.

பஜாஜ் வி15-க்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து, இதன் உற்பத்தியை வரும் செப்டம்பர் மாதம் முதல் அதிகரிக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மேலும் புதிய இரண்டு வி15 மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுவருகிறது. 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் டிடிஎஸ்-ஐ இன்ஜினைக்கொண்ட பஜாஜ் வி15, அதிகபட்சமாக 12 பிஹெச்பி ஆற்றலையும், 13 என்எம் இழுவைத்திறனையும் கொண்டது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 62,002-ல் தொடங்குகிறது.

Credits: Bajaj V15

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com