இன்னோவா க்ரிஸ்டாவின் பெட்ரோல் இஞ்சின் அறிமுகம்!

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பெட்ரோல் வேரியண்ட்களை அந்த நிறுவனம் இன்று சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது
இன்னோவா க்ரிஸ்டாவின் பெட்ரோல் இஞ்சின் அறிமுகம்!

டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்டா டீசல் வாகனத்திற்கு சந்தையில் பெரிய வரவேற்பு கிட்டியதை தொடர்ந்து, இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பெட்ரோல் வேரியண்ட்களை அந்த நிறுவனம் இன்று சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது

2.7 லிட்டர் விவிடி-ஐ பெட்ரோல் இஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வேரியண்ட், , 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் என 2 கியர் தேர்வுகளுடன் வெளிவந்திருக்கிறது. அதிகபட்சமாக 166 ஹெச்பி ஆற்றலையும், 245 என்எம் இழுவைத்திறனையும் கொண்டிருக்கிறது.

ஆட்டோமெட்டிக் தேர்வு மற்றும் மேனுவல் தேர்வுடன் கூடிய இன்னோவா க்ரிஸ்டாவானது , 7 இருக்கைகளுடன் கூடிய Zx வேரியண்ட், 7 மற்றும் 8 இருக்கைகளுடன் கூடிய Gx வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்களாக கிடைக்கிறது. ஆட்டோமெட்டிக் வேரியண்ட் 10.83 கிமீ மைலேஜையும், மேனுவல் வேரியண்ட் 9.89 கிமீ மைலேஜையும் தரும். கார்னெட் ரெட், வொயிட் பியர்ல் க்ரிஸ்டல் ஷைன், அவண்ட்-கார்டே ப்ரான்ஸ் என மூன்று புதிய வண்ணங்களுடன் கிடைக்கிறது.

பொதுவாக அனைத்து வேரியண்ட்களிலும் மூன்று ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் பிரேக் அஸிஸ்ட் போன்ற வசதிகள் இருக்கும். முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட டீசல் க்ரிஸ்டா இரண்டே மாதங்களில் 24,000 எண்ணிக்கைகள் விற்பனையானது. 9000 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பெட்ரோல் க்ரிஸ்டாவும் அதேயளவுக்கான வரவேற்பை பெறும் என நம்புவதாக டெயோட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com