13 கோடிக்கு மோட்டார் பைக், இது ஓட்டறதுக்கா இல்லை ஷோ கேஷ்ல வச்சு அழகு பார்க்கறதுக்கா?

ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக்குகள் விலை உயர்ந்தவை என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சாதரணமாகவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ஹார்லி டேவிட்ஸன் பைக்குகளின் விலை 4 லட்சம் முதல் 13 லட்சம் வரை
13 கோடிக்கு மோட்டார் பைக், இது ஓட்டறதுக்கா இல்லை ஷோ கேஷ்ல வச்சு அழகு பார்க்கறதுக்கா?

ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக்குகள் விலை உயர்ந்தவை என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சாதரணமாகவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ஹார்லி டேவிட்ஸன் பைக்குகளின் விலை 4 லட்சம் முதல் 13 லட்சம் வரை விலை வேறுபடும். அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு பைக்கில் இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறும், கஸ்டமர்களின் வாங்கும் திறனைப் பொருத்தும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கேற்ப பைக்குகளின் விலை நிர்ணயிக்கப்படும். 

இந்நிலையில் அமெரிக்கன் க்ரூஸர் நிறுவனம், சுவிஸ் வாட்ச் மற்றும் ஆபரணத் தயாரிப்பு நிறுவனமொன்றுடன் கூட்டணி வைத்து தனது புதிய மாடல் ஹார்லி டேவிட்ஸன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் எடிஷன் வெளியிடப்பட்டதன் முக்கிய நோக்கமே சுவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள ப்ளூ எடிஷன் அதி நவீன வாட்ச்களை புரமோட் செய்வதற்காகத் தான் என்பதால் புது ஹார்லி டேவிட்ஸன் ப்ளூ எடிஷன் பைக்கில் வைரங்கள் பதிக்கப்பட்ட வாட்ச் பொறுத்தப்பட்டுள்ளதோடு. இதில் அதி நுட்பமான வேலைப்பாடுகள் செய்யவேண்டி இருந்ததால் இந்த பைக்குகள் மொத்தமும் மனிதக் கரங்களால் மட்டுமே அடித்துத் தட்டி, நீட்டி, வெல்டிங் செய்யப்பட்டு பாலீஷ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். 

மனித மூளை அளவுக்கு மெஷின்களுக்கு கலை நுணுக்க உணர்வு இருக்காதே. அதனால் தான். அமெரிக்க க்ரூஸர் நிறுவனம், சுவிஸ் வாட்ச் மற்றும் ஆபரணத்தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து உருவாக்கியுள்ள இந்த எக்ஸ்க்ளூசிவ் ப்ளூ எடிஷன் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகளின் விலை சுமார் 13 கோடி என்கிறார்கள்.

அது சரி ஆனால், இந்த விலைக்கு பைக்கை வாங்கிவிட்டு அதை நம்மூர் குண்டும், குழியுமான சாலையில் ஓட்ட முடியுமா? அதன் மெட்டாலிக் ஃபினிஷிங் என்ன? அதில் செய்யப்பட்டுள்ள நுட்பமான வேலைப்பாடுகள் என்ன? நம்மூரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டில் இந்த வகை அரிதான பைக்குகளை ஓட்டினால் பைக் இரண்டே தினங்களில் களை மாறிப் போகும் என்பது வாஸ்தவமே. ஆனால் கவலைப்படாதீர்கள். இந்த பைக்குகள் இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்கு இல்லை. பைக்குகள் என்று சொல்வதை விட ஒரே ஒரு பைக் என்று தான் சொல்லவேண்டும். ஆம் இந்த ப்ளூ எடிஷன் ஹார்லி டேவிட்ஸன் பைக் ஒன்றே ஒன்று மட்டுமே இப்போதைக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் உலகம் முழுவதுமுள்ள ஹார்லி டேவிட்ஸன் பைக் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க இந்த ஒன்று போதுமே! விரைவில் சில நூறு பைக்குகளாவது உலகப் பணக்காரர்களுக்காக இந்த விலையில் தயாராகலாம். அதற்கொரு முன்னோட்டமாக சுவிஸ் தலைநகர் ஜூரிச்சில் இந்த பைக்குகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com