8.2 லட்சம் யூனிட் உற்பத்தி திறனை அதிகரிக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் செமிகண்டக்டர் பற்றாக்குறையால் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார்.
hyundai065934
hyundai065934

நொய்டா: இன்றைய டெக் உலகில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் செமிகண்டக்டர்களை வைத்து உருவாக்கப்படும் நிலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் செமிகண்டக்டர் பற்றாக்குறையால் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த சிப் பற்றாக்குறை விநியோகத்தில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதால், இது வரை தங்களிடமிருந்த பேக்லாக் ஆர்டர்களைக் குறைய தொடங்கும். அதே வேளையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆண்டுக்கு 8.2 லட்சம் யூனிட்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க உள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிப் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்கள் கைவசம் சுமார் 1.15 லட்சம் யூனிட்கள் பேக்லாக் ஆர்டர்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.  அவற்றில் பெரும்பாலானவை அதன் பிரபலமான பிராண்ட் எஸ்யூவி-யான 'க்ரெட்டா' மற்றும் 'வென்யூ' ஆகும்.

இந்த ஆண்டு முதல் சிப் பற்றாக்குறை நிலைமை சரியாகி விடும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை சாமாளிக்க நாங்கள் எங்கள் உற்பத்தியை அதிகரித்து வருகிறோம்.  இந்த ஆண்டு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நன்புகிறோம் என்றார் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அன்சூ கிம்.

கடந்த ஆண்டு அனைத்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அது சிறப்பாக உள்ளது என்றார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தலைமை இயக்க அதிகாரி தருண் கார்க் கூறுகையில், நிறுவனம் தற்போது சுமார் 1.15 லட்சம் யூனிட் பேக் ஆர்டர்களைக் கொண்டுள்ளது. அவை பெரும்பாலும் 'க்ரெட்டா' மற்றும் 'வென்யூ' எஸ்யூவி ரக மாடல் கார்களாகும். அதே வேளையில் ஜூன் மாதம் முதல் ஆண்டுக்கு 7,60,000 யூனிட்களில் இருந்து 8,20,000 யூனிட்டுகளாக உற்பத்தியை அதிகரிக்க போவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் அதிக அளவில் மைக்ரோசிப்களை பெறப்போவதால், க்ரெட்டாவின் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல், புதிய மாடல்களையும் நாங்கள் அறிமுகப்படுத்துவோம் என்றார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 85 சதவீத உள்ளூர் சந்தையில் எட்டிய போதிலும், இந்தியாவில் தற்போது மைக்ரோசிப் தொழில் நுட்பம் இல்லாததால், சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து சில எலக்ட்ரானிக் சிப்புகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com