நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

மென்பொறியாளா் வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

Updated On :6 ஜனவரி 2021, 8:28 am IST

மென்பொறியாளா் வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி, ஈரண்ணாபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் தீபக். தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இவா், கடந்த ஜன. 1-ஆம் தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை பெங்களூரு திரும்பியுள்ளாா். இதற்கிடையே அவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தீபக் வீட்டின் காவலாளி காணாமல் போயுள்ளதால், சந்தேகத்தின் பேரில் போலீஸாா் அவரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.