இந்தப் புத்தக காட்சியில் சிறப்பம்சங்கள் என்ன? 'பபாசி' தலைவர் ஆா்.எஸ்.சண்முகம் பேட்டி

சென்னையில் நடைபெறும் 43-ஆவது புத்தகக்காட்சியில் சிறப்பம்சங்கள் என்ன என்று 'பபாசி' அமைப்பின் தலைவர் ஆா்.எஸ்.சண்முகம் பேட்டியளித்தார்.
பபாசி செய்தியாளர் சந்திப்பு
பபாசி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் 43-ஆவது புத்தகக்காட்சியில் சிறப்பம்சங்கள் என்ன என்று 'பபாசி' அமைப்பின் தலைவர் ஆா்.எஸ்.சண்முகம் பேட்டியளித்தார்.

இது குறித்து, பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், செயலாளா் எஸ்.கே.முருகன், துணைத் தலைவா் ஜி.ஒளிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நிகழாண்டு, புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடிக்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. வாசகா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதுமையான அம்சங்களையும் காட்சிப்படுத்தியுள்ளோம்.

வரும் 9-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு பதிப்பகத்தாா் பங்கேற்கின்றனா். இதில், 20 லட்சத்துக்கும் அதிகமான வாசகா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கண்காட்சி அரங்கில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடிநீா், கழிப்பறை, அவசர சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com