தமிழ்நாட்டு சமண ஓவியங்கள்: புத்தகக் காட்சியில் புதியவை

தமிழ்நாட்டுச் சமணம் எனும் தலைப்பில் ஏற்கெனவே அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தியால் வெளியிடப்பட்டுள்ளது.
  தமிழ்நாட்டு சமண ஓவியங்கள்
தமிழ்நாட்டு சமண ஓவியங்கள்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டுச் சமணம் எனும் தலைப்பில் ஏற்கெனவே அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தியால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் சமணம் சார்ந்த கட்டடக் கலை, சிற்பக்கலைகள் குறித்தும் பல நூல் கள் வெளிவந்துள்ளன.

ஆனால், சமண ஓவியக் கலை குறித்த நூல்கள் தற்போதுதான் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை திருப்பரங்குன்றம், கரந்தை, ஆனை மலை, சித்தன்னவாசல், திருமலை என பல இடங்களில் ஆவணப்படுத்தும் வகையிலும், ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையிலும் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி கடந்த இருபதாம் நூற் றாண்டு வரையில் தமிழகத்தில் சமணம் எப்படி இருந்தது என்பதை ஆவணங்களுடன் படிப் போரும், பார்ப்போரும் வியக்கும் வகையில் நூலின் அனைத்துப் பக்கங்களும் வண்ணப் பக் கமாக இருப்பதும் சிறப்பம்சமாகும்.

பேராசிரியரான இந்நூலாசிரியர் சா.பாலு சாமி, திறமையான கலை, வரலாற்று ஆய்வா ளரும் கூட என்பதை நூலின் மூலம் நிரூபித் துள்ளார். சுவர் ஓவியக் கலையை நுட்பமாக ஆராய்ந்துள்ளதுடன், வெவ்வேறு இடங்களில் காணும் ஓவியங்களுக்கு இடையே உள்ள வேறு பாடுகளை ஆய்வு நோக்கில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் சமண வரலாற்றை ஆய்வுச் சான்று படங்களுடன், சாமானியர் முதல் ஆய் வாளர் வரையில் அனைத்துத் தரப்பினரும் அறிந்து போற்றும் வகையில் இந்த நூல் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இளநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சே. கரும்பாயிரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com