
சுந்தர ராமசாமி எழுதிய "ஜே.ஜே. சில குறிப்புகள்' என்னும் நாவலை கடந்த 1986-ஆம் ஆண்டு வாசிக்க ஆசைப்பட்டு, ஓராண்டு காத்திருந்த பின் 1987-ஆம் ஆண்டுதான் வாசிக்க முடிந்தது. அந்த நாவல் மலையாள இலக்கியச் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும்.
ஆனாலும், அதில் தமிழகத்தைப் பற்றிய விமர்சனமும் அடங்கியிருப்பதை படித்தாலே உணர முடியும்.
அந்த நாவலின் கட்டமைப்பு, மொழிநடை, அழகியல் கூறுகள், சிந்தனை என அனைத்து நிலைகளிலும் படிக்க வேண்டிய நாவலாக இருக்கிறது.
இரண்டாவதாக, ஹெர்மன் ஹெஸ்ஸே எனும் ஜெர்மன் எழுத்தாளரின் "சித்தார்த்தா' எனும் நாவலாகும். இந்திய தத்துவப் பின்புலத்தில் எழுதப்பட்ட அந்த நாவல் குறித்து கேள்விப்பட்டு தேடிப் பிடித்து படித்தேன். அந்நாவல் நமது வாழ்க்கையின் பாதையையே மாற்றும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக, டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு' நாவல். ரஷிய மொழிபெயர்ப்பான அந்நாவல் குற்றவுணர்ச்சியால் ஒருவன் அல்லாடி, அதன் மூலம் தன்னைத் திருத்திக் கொண்டு, மாறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நமது மனசாட்சியை உலுக்கும் வகையில் "புத்துயிர்ப்பு' நாவல் அமைந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.