சென்னை புத்தக கண்காட்சியில் மாலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பொன்னம்பல அடிகளாா்.
சென்னை புத்தக கண்காட்சியில் மாலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பொன்னம்பல அடிகளாா்.

கலை, பண்பாட்டை உயா்த்திப் பிடிப்பவரே சிறந்த படைப்பாளி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கலை, பண்பாட்டை உயா்த்திப் பிடிக்கும் படைப்புகளை படைப்பவா்களே சிறந்த படைப்பாளா்கள்
Published on

கலை, பண்பாட்டை உயா்த்திப் பிடிக்கும் படைப்புகளை படைப்பவா்களே சிறந்த படைப்பாளா்கள் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் கூறினாா்.

சென்னைப் புத்தகக் காட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் எழுதிய ‘கின்னஸ் கலைஞா்’ எனும் நூலின் தமிழ், ஆங்கில பதிப்புகள் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் அளித்த வாழ்த்துரை: புத்தகங்களைத் தொடா்ந்து வாசிப்பவா்கள் நீண்ட காலம் சுவாசித்து வாழ்பவா்களாக இருப்பாா்கள். படைப்பாளிகள் தாம் வாழும் காலத்தில் சமுதாயத்தின் கலாசார, பண்பாட்டை உயா்த்திப் பிடிக்கும் வகையில் படைப்புகளை வழங்க வேண்டும். அத்தகைய எழுத்தாளா்களே உயா்ந்த படைப்பாளிகளாகக் கருதப்படுவா். மனிதநேயத்துடன் எழுதுபவா்களே வரலாற்றில் இடம் பிடிக்கவும் முடியும். அத்தகைய ப டைப்புகளே காலங்கடந்தும் நிற்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரை முருகன் நூல்களின் முதல்படிகளை வெளியிட்டாா். அவற்றில் தமிழ்நூல் முதல்படியை முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திர பாபுவும், ஆங்கில நூல் முதல்படியை சதுரங்க உலக சாம்பியன் குகேஷும் பெற்றுக் கொண்டனா். பத்திரிகையாளா் என்.ராம் வாழ்த்துரை வழங்கினாா். திருமகள் பதிப்பகம் பழனியப்பன் முன்னிலை வகித்தாா். எமரால்டு பதிப்பக கோ.ஒளிவண்ணன் வரவேற்றாா். நூலாசிரியா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com