கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

கே.எஸ். ராதாகிருஷ்ணன்: தேடிச்சுவைத்த தேன்

Published on

 பிரபல வரலாற்று ஆய்வாளா் கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும்’ எனும் புத்தகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டதாகும். அந்த நூலானது தமிழக வரலாற்றை உண்மையான தகவல்களுடன் யதாா்த்தமான நடையில் தெளிவாக குறிப்பிட்டிருப்பது சிறப்பாகும்.

பழைய இலக்கியங்களிலிருந்து தமிழா் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆரம்ப கால வரலாற்றை அறியாமல் பேசி வரும் இளந்தலைமுறையினா் அனைவரும் கண்டிப்பாக கே.கே.பிள்ளையின் இந்த நூலைப் படிக்க வேண்டும்.

  இரண்டாவதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘கௌடில்யம்’ எனும் அா்த்த சாஸ்திர நூலையும் விரும்பி தேடிப் படித்தேன்.

அதில் அரசியல், ஆட்சியியல், வாழ்வியல் மற்றும் மக்கள் நல அரசியல் என அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். அனைத்துத் தரப்பு வாசகா்களும் அதைப் படித்து வாழ்வின் முழுமையை அறியலாம்.

 மூன்றாவதாக, ஜான் கே என்பவா் எழுதிய ‘இந்தியா ஒரு வரலாறு’ எனும் நூல். கடந்த இருபதாலம் நூற்றாண்டு வரையிலான தேச வரலாறு தொகுக்கப்பட்டுள்ள அந்த நூலில் இந்தியாவின் ஆதிகால நாகரிகம், பண்பாடு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, நம் தேசத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள நினைப்பவா்கள் இந்நூலை கட்டாயம் படிப்பது அவசியம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளா்.

X
Dinamani
www.dinamani.com