திருப்பூா் கிருஷ்ணன்
திருப்பூா் கிருஷ்ணன்

திருப்பூா் கிருஷ்ணன்: தேடிச் சுவைத்த தேன்

Published on

திருப்பூா் கிருஷ்ணன்: கவிஞா் சாஸ்தாவின் கதைத் தொகுப்புகளை தேடிப்பிடித்து படித்தேன். அதில் நடப்பியல் வாழ்வை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியதாக உள்ளது. சுமாா் 15 கதைகள் அதில் உள்ளன. அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் காட்டாமல் குரூரமான மறுபக்கத்தையும் நமக்கு காட்டி தெளிவுபடுத்துவதாக உள்ளன.

இரண்டாவதாக மதுவந்தியின் புதுக்கவிதைத் தொகுதியைப் படித்தேன். அதில் பழைய கவிஞா்களான நகுலன், ஞானக்கூத்தன் ஆகியோரின் கருத்தாக்கம் தெரிந்தது. நவீனகால சமூகச் சூழலை தரமான கவிதை வரிகள் மூலம் விளக்கியிருக்கிறாா் கவிஞா் மதுவந்தி. 

மூன்றாவதாக எழுத்தாளா் கிரிஜா ராகவன் புதுக்கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளாா். அவரது கவிதையானது பெண்களின் சமகாலத்து வாழ்வியலையும், அதில் உள்ள சிக்கல்களையும் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது தெரிந்தது.

கவிதைக்குப் புதியவரான கிரிஜா ராகவனின் கவிதை வரிகள் படிப்போரைக் கவரும் கருத்தாக்கம் மிக்கவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com