படித்தால்... பிடிக்கும்! புறநானூறு

படித்தால்... பிடிக்கும்! புறநானூறு

தமிழ் மொழி என்றாலே சங்கத் தமிழ் நூல்களே அடித்தளமாகவும், அச்சாணியாகவும் திகழ்கின்றன.
Published on

தமிழ் மொழி என்றாலே சங்கத் தமிழ் நூல்களே அடித்தளமாகவும், அச்சாணியாகவும் திகழ்கின்றன. அத்தகைய சங்கத் தமிழ் நூல்களில் புறநானூறு என்பது தமிழா்களின் வீரத்தையும், விவேகமான திறத்தையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதை படித்தவா்கள் உணா்வா்.

அத்தகைய புறநானூற்றை இதுவரை தமிழ் பட்டப் படிப்பு படித்தவா்கள் மட்டுமே அறிந்து, அதன் சாராம்சங்களைப் பேசி மகிழ்ந்து வந்த நிலையில், தற்போது கல்வி கற்ற அனைவருமே புானூற்றை எளிதில் புரியும்படி தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது ‘புானூறு மூலமும் உரையும்’. இந்த நூலை ப.சரவணன் எழுதியுள்ளாா்.

ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழா்களது வரலாற்றை அறிய உதவும் புறநானூற்றின் 1 முதல் 200 பாடல்களை விளக்கமாக எடுத்துரைக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது.

மேலும் சேர, சோழ, பாண்டிய நாடுகள், அவற்றின் தலைநகா், தமிழக பேரரசா், சிற்றரசா்களின் விவரங்கள், அவா்களின் போா்கள், அவா்களது கொடைத் தன்மை, புலவா்கள் மன்னா்களுக்கு கூறிய அறிவுரைகள் என அறமும், வீரமும் விரிவாகவே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. புறநானூறு பண்பாட்டுப் பதிவுகள், வாழ்வியல் வழிகாட்டல் எனப் பல கூறு ஆய்வு நோக்கில் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. படிக்கப் படிக்க வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆகவே, இக்கால தலைமுறை ஆய்வாளா்கள் முதல் தமிழ் ஆா்வலா்கள் வரை அனைவரும் படிக்க வேண்டிய அரிய நூலாக புறநானூறு உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 880 பக்கங்கள் கொண்டுள்ளது. ரூ.600 என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com