

MAN'S SEARCH FOR MEANING (ஆங்கிலம்); எழுத்தாளர்: Viktor .E. Frankl
இந்த புத்தகம் மிக அருமையான புத்தகம். நூலாசிரியர் ஒரு மனோதத்துவ நிபுணர். இந்த புத்தகத்தில் அவர் வாழ்க்கையை பற்றியும், வாழ்வின் எந்தவொரு துன்பத்திற்கும் ஒரு தீர்வும், நாம் வாழ்வதற்கான ஒரு அர்த்தமும் இருப்பதாக முன்மொழிகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் நடந்த இனப்படுகொலையை வைத்து மேற்சொன்னவற்றை அற்புதமாக விளக்குகின்றார்.
அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம். கரோனா நோய்த் தொற்றுக்குப் பயந்து உலகமே வீட்டில் அடங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தில் படிக்க வேண்டிய சரியான புத்தகமாக நான் உணர்கிறேன். இணையத்தில் நான் மேற்சொன்ன புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
- அன்பரசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.