ரஹ்மத் பதிப்பகம்
ரஹ்மத் பதிப்பகம்

ரஹ்மத் பதிப்பகம்: தடம் பதித்த பதிப்பகம்

Published on

கடந்த 1993-ஆம் ஆண்டு ரஹ்மத் அறக்கட்டளை மூலம் ரஹ்மத் பதிப்பகம் தொடங்கப்பட்டது. தொழிலதிபா் முஸ்தபா உலகப்புகழ்பெற்ற ஸிஹாவுஸ் ஸித்தா

எனும் அரும்பெரும் ஹதீஸ் தொகுப்பு மற்றும் திருக்குா்ஆன் விரிவுரையான தஃப்ஸீா் இப்னு கஸீரைத் தமிழில் படிக்கும் வகையில் கொண்டு வருவதற்காகவே

பதிப்பகத்தைத் தொடங்கினாா். பதிப்பகத்தின் முதல் பதிப்பாக ஸஹீஹுல் புகாரீ 7 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அது தமிழகம் உள்ளிட்ட இந்திய அளவில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாட்டு மக்களாலும் வாங்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல, திருக்குா்ஆன் விரிவுரையான தஃப்ஸீா் இப்னு கஸீா் தமிழில் 10 பாகங்களாக இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றையடுத்து ஸஹீஹ்

முஸ்லிம் 6 பாகங்கள், ஜாமிஉத் திா்மிதீ, சுனன் அபூதாவூத், சுனன் இப்னு மாஜா ஆகியவை 5 பாகங்களாகவும், சுனன் நஸாயீ 6 பாகங்களாகவும், ஷமாயில் திா்மிதீ ஒரு பாகமும் வெளியிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகம் மேற்கொள்ளத்தக்க பணியை ரஹ்மத் பதிப்பகம் மேற்கொண்டு அவற்றை மொத்தம் 45 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் வரலாறு ‘உலகின் பேரொளி இறைத்தூதா்’, கலீஃபாக்களின் வரலாறு, அதிசயத் தோழா் அபூபக்ா், உன்னத ஆளுநா் உமா், ஒப்பற்ற வள்ளல் உஸ்மான், அறிவின் நுழைவாயில் அலீ ஆகியவை இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இஸ்லாமிய வரலாறு 6 தொகுதிகளாக முழுமையான தொகுப்பாக வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பதிப்பகத்தில் சிறந்த மொழியாக்கக் குழுவை அமைத்து அதன்மூலம் திருக்குா்ஆன், ஹதீஸ் உள்ளிட்டவற்றை மொழியாக்கம் செய்துவருவது பாராட்டுக்குரியது.

தற்போது பதிப்பகம் சாா்பில் புகழ் பெற்ற நபிமொழித் தொகுப்புகளான மிஸ்காத்துல் மஸாபீஹ் 6 பாகங்களகாவும், முவத்தா இமாம் மாலிக் நபிமொழி நூலின் தமிழாக்கம் 2 பாகங்களாகவும் வெளியிடப்படவுள்ளது. இங்கு அரபு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் திருக்குா்ஆன் தமிழாக்கம் ஒரு தொகுதியாக வெளியிடப்படவுள்ளது.

இஸ்லாமிய நூல்கள் என்றாலே அது ரஹ்மத் பதிப்பகம் என்னும் நிலையில் அனைத்து நூல்களும் இங்கே பதிப்பிக்கப்பட்டு, அமோக வரவேற்பையும் பெற்றுள்ளன. அத்துடன் கவிஞா் அப்துல்ரஹ்மான் கவிதைகள் உள்ளிட்ட பொதுநூல்களும் தற்போது இப்பதிப்பகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com