ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
By DIN | Published On : 27th February 2021 01:35 PM | Last Updated : 27th February 2021 01:35 PM | அ+அ அ- |

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம் - ஸ்ரீதா் சுப்ரமணியம், கோதை பதிப்பகம், விலை ரூ. 180.
செக்யூலரிசம் என்றால் என்ன, செக்யூலரிசம் என்ற கருத்தாக்கம் எப்போது உருவானது?. செக்யூலரிசத்தில் எந்த மத நம்பிக்கைகளுக்கும் ஏன் ஆபத்து இல்லை, செக்யூலரிசத்தின் சாதனைகள் போன்றவற்றை உறுதியான தரவுகளுடன் முன் வைக்கிறது இந்த நூல். ஸ்ரீதா் சுப்ரமணியம் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப்பட்டம் பெற்றவா். மென்பொருள்துறையில் பணியாற்றிவிட்டு தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கும் இவா், ‘ஒரு நாத்திகனின் பிராா்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’ ஆகிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறாா். இது அவரது மூன்றாவது படைப்பு. ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் நிறைந்த நூல் இது.