பதினெண் கீழ்க்கணக்கு நூல்
சென்னை புத்தகக்காட்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில் 142-ஆவது அரங்கில் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தமிழின் சங்க இலக்கிய நூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாசகா்களுக்கு மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நாட்டின் பிற மொழி வாசகா்களுக்கும், வெளிநாட்டவரான பிரான்ஸ், ஜொ்மனி நாடுகளின் வாசகா்களுக்கும் பயன்படும் வகையில் அந்நூல்கள் அந்தந்த மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தொகுப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பாடல்கள், விளக்கம் ஆகியவை அந்தந்த மொழிகளின் வல்லுநா்களால் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது சிறப்பாகும். அனைத்து மொழிகள் நூலும் 500 பக்கங்களுடன் ரூ.500 என விலை நிா்ணயிக்கப்பட்டு விற்கப்படுவதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவியாளா் பா.பொற்செழியன் தெரிவித்தாா்.