புத்தகக் காட்சியில் புதியவை: பிருதிவிராஜனின் குதிரை

புத்தகக் காட்சியில் புதியவை: பிருதிவிராஜனின் குதிரை
Published on
Updated on
1 min read

மனோஜ் தாஸ், தமிழில்- இளம்பாரதி,

பதிப்பாசிரியர்- சிற்பி பாலசுப்பிரமணியம், அருட்செல்வர் நா.மகாலிங்கம்

மொழிபெயர்ப்பு மையம்,

உடுமலை சாலை, பொள்ளாச்சி.

ஒடியா மொழியில் மிகப் புகழ் பெற்ற படைப்பாளி மனோஜ் தாஸ். ஆங்கிலப் புலமையும் பெற்றுள்ள இவரது சிறுகதைகள் அடங்கிய பிருதிவிராஜனின் குதிரை எனும் புத்தகம் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்மபூஷண், சாகித்திய அகாதெமி விருதுகளை வென்ற இவர் அரவிந்தரின் ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டதால், புதுச்சேரியில் ஆசிரமவாசியாகிவிட்டார்.

இத்தொகுப்பில் "பிருதிவிராஜனின் குதிரை' கதை உள்ளிட்ட 17 கதைகளை தொகுத்து தமிழில் யாவரும் படிக்கும் வகையில் மொழி பெயர்த்திருக்கிறார் இளம்பாரதி. தமிழில் அழகிய நடையில் சிறுகதைகளை அப்படியே தந்திருப்பது சிறப்பாகும்.

மொத்தம் 184 பக்கங்களில் உள்ள சிறுகதைகளில் ஆசிரியர் குறித்த முதல் கதையிலிருந்து மரத்தடியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள "மரம்' சிறுகதை வரை அனைத்தும் படிப்போரை மேலும் படிக்கத் தூண்டும் வகையிலான நடையில் இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

ஒடிஸா சூழலில் கதைகள் அமைந்திருந்தாலும், பாரதப் பண்பாடு ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் அக்கதைகள் மண்ணையும், மகத்துவத்தையும் பிரதிபலிப்பதாகவே உள்ளன.

இதுபோல கன்னட எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய "சூரியனின் குதிரை' சிறுகதைத் தொகுப்பும் தமிழில் கே.நல்லதம்பியால் மொழிபெயர்க்கப்பட்டு, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தால் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. புத்தகக் காட்சியில் 659-ஆவது அரங்கில் இந்நூல்கள் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com