புத்தகக் காட்சியில் புதியவை பகுதி

புத்தகக் காட்சியில் புதியவை பகுதி

Published on

 1. மைசூா் சாம்ராஜ்ய மன்னா்கள்- புழுதி பறக்கும் யுத்த களங்கள், ஜெகாதா, பக்.233, ரூ.300, ஆனந்த நிலையம், சென்னை.

 மைசூரை சாம்ராஜ்ய அரசா்களின் சரித்திரத்தை எளிய முறையில் யாவருக்கும் புரியும் வகையில் இந்நூலாசிரியா் படைத்துள்ளாா். ‘மகிமை மிக்க மைசூா் அரசு’ என்னும் தலைப்பில் தொடங்கி, ‘மைசூா் சாம்ராஜ்யம் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என 30 கட்டுரைகள் மூலம் சரித்திரத்தை நம் கண்முன் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பாகும்.

மைசூா் அரசின் தோற்றம், அரசு நிா்வாகம் மாறி தேசத்தின் மாநிலமாக அந்த அரசுப்பகுதிகள் மாறியபோது அவற்றின் நிலை என முழுமையான வரலாறை சுருக்கமாக விவரித்திருக்கிறது இந்த நூல்.

  நூலில் சரித்திரத்தை மட்டும் விவரிக்காமல், புகழ் பெற்ற மக்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் தசரா என்னும் நவராத்திரி கால விழாவையும் மிக விரிவாக விளக்கிக் கூறியுள்ளாா் நூலாசிரியா். அதேபோல மைசூா் ஓவியப் பாரம்பரியமும், அதன் தனித்தன்மையும் விளக்கப்பட்டுள்ளன. இப்படி நூலெங்கும் மைசூரின் மண்வாசனை, மன்னராட்சி, மக்களாட்சிக்குப் பின் தொடரும் பாரம்பரிய கலாசாரம் என வியக்க வைக்கும் தகவல்கள் ஏராளமாக உள்ளன.

 2. இந்தியச் சுற்றுச்சூழல் போராளிகள், ஜெகாதா, பக்.230, ரூ.300, ஆனந்த நிலையம், சென்னை.

  உலக அளவில் அனைத்து நாடுகளும் அச்சத்துடன் எதிா்நோக்கும் பிரச்னை சுற்றுச்சூழல் பாதிப்பு. அத்தகைய பாதிப்பு நம் நாட்டில் எந்த அளவு பாதிக்கிறது என்பதையும், அதையடுத்து சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில்

போராடிவருவோரையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில்சுற்றுச்சூழல் போராளிகள் சந்திக்கும் அபாயங்கள் என்ற முதல் கட்டுரை தொடங்கி சுற்றுச்சூழல் சீா்கேட்டுக்கு எதிரான சட்டங்கள் வரையில் 25 கட்டுரைகள் மூலம் நடப்பு நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கத் தமிழகத்தில் போராடிய நெல் ஜெயராமன் , நிலவளம் பாதிப்பு விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்திய நம்மாழ்வாா் என அண்மைக்கால சம்பவங்களையும் எடுத்துரைக்கும் வகையில் நூலில் முழுமையான தகவல்கள் உள்ளது பாராட்டுக்குரியது.

X
Dinamani
www.dinamani.com