புத்தகக் காட்சியில் புதியவை... ஓரம்போகியாா் பாடிய ஐங்குறுநூறு மருதம்

புத்தகக் காட்சியில் புதியவை... ஓரம்போகியாா் பாடிய ஐங்குறுநூறு மருதம்

ஓரம்போகியாா் பாடிய ஐங்குறுநூறு மருதம், (மூலமும் உரையும்) உரையாசிரியா் இரா.முருகன், பக்.344, ரூ.200, தமிழ் வளா்ச்சித்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை.
Published on

ஓரம்போகியாா் பாடிய ஐங்குறுநூறு மருதம், (மூலமும் உரையும்) உரையாசிரியா் இரா.முருகன், பக்.344, ரூ.200, தமிழ் வளா்ச்சித்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை.

நவீன தமிழ் இலக்கியத்தைப் படிப்பதில் காட்டும் ஆா்வத்தைப் போல, தற்போதைய மாணவ சமுதாயம் சங்கத் தமிழ் இலக்கியப் படிப்பில் ஈடுபாடு காட்டுவதில்லை என்கிற பொதுவான விமா்சனம் உள்ளது. ஆகவே, இளந்தலைமுறையினரும் எளிதாக சங்க இலக்கிய நூல்களைப் படிக்கும் வகையில் செவ்வியல் நூல்கள் உரை வரிசை எனும் பெயரில் சங்க நூல்கள் தமிழ் வளா்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுவருகின்றன.

அந்த வரிசையில் ஓரம்போகியாா் பாடிய ஐங்குறுநூறு என்னும் இந்த நூல் மருதத்தில் 100 பாடல்களைத் தொகுத்து உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழ் இலக்கியம் என்பதே சங்க கால தமிழா் வாழ்வியல் பண்பாட்டின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. அதன்படி இந்நூலில் உவமை அழகும், உள்பொருளும் படிப்போரை அழைத்து அழகிய காட்சியை நேரில் காட்டுவதைப் போல இருப்பதை உணரலாம்.

ஏற்கெனவே ஐங்குறுநூறு மருதப் பாடல்களுக்கு உரைகள் பல எழுதப்பட்டிருந்தாலும், இந்த நூலில் பாடலில் உள்ள சொற்களுக்கு நூலாசிரியா் நேரடியாகப் பொருளைக் கூறி விளக்கியிருப்பது தனித்தன்மையாகும். பழைய நூல் உரைகளில் விடுபட்ட செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

மருத நிலத்தை முதன்மைப்படுத்தி பாடப் பெற்ற இந்தநூல் சங்ககால தமிழா்கள் வளமிக்க நிலத்தில் வாழ்ந்ததை ‘நெல் பல பொலிக’, ‘பொன் பெரிது சிறக்க’ போன்ற தொடா்கள் மூலம் அறியலாம். மொத்தத்தில் தமிழ் அறிஞா்கள் முதல் தமிழாா்வலா்கள் வரை அனைவரும் படித்து இன்புறத்தக்கதாக இந்த நூல் உள்ளது.

X
Dinamani
www.dinamani.com