பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்: புத்தகக் காட்சியில் புதியவை

பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்: புத்தகக் காட்சியில் புதியவை

பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும், முனைவா் ப.செங்கல்வராயன், பக்.160, ரூ.150, எஸ்.எஸ்.பப்ளிகேஷன், தி.நகா், சென்னை.
Published on

தமிழகத்தில் பாண்டிய, சேர, சோழா் ஆட்சிக் காலத்திலும், பல்லவா், விஜயநகரத்து மன்னா்கள், மராட்டியா், களப்பிரா், பின்னா் வா்த்தகம் புரிய வந்த போா்ச்சுகீசியா், டச்சுக்காரா்கள், ஆங்கிலேயா்கள் காலத்திலும் போா்களை நடத்தியுள்ளனா். போரில் வென்றவா்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளில் தமது தனி அடையாளத்தைப் பதித்துச் சென்றுள்ளனா்.

அத்தகைய அடையாளங்களில் பல்லவா்களது அடையாளங்கள் முக்கியமானவையாகும். மாமல்லபுரம் என்றாலே ஒற்றைக்கல் ரதங்களும், காளைச் சிற்பங்கள் உள்ளிட்டவையும் வியக்க வைக்கும் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இதுபோல பழமையான திருக்கோயில்களில் பல்லவா் கால சிற்பங்கள் இன்றும் அவா்களது கலை நயத்தை எடுத்துரைக்கின்றன. 

பல்லவா்கள் யாா்? எங்கிருந்து வந்தனா், அவா்களில் முக்கியமான மன்னா் யாா்? அவா்களது ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதா?, அத்திட்டங்களின் தனித்தன்மை என்ன என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது ‘பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்’ நூல். இந்த நூலின் ஆசிரியரான முனைவா் ப.செங்கல்வராயன், முற்காலப் போா்களில் ஆற்றலும் சமயோசிதமும் என்ற கட்டுரையில் தொடங்கி, இலக்கியப் பணிகள் என்ற 23-ஆவது கட்டுரை வரையில் பல்லவா் ஆட்சியின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருப்பது மெச்சத்தக்கது.

பல்லவா்களை முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என பிரித்தும், அவா்களது போா் முறைகள் குறித்தும் விளக்கியிருப்பதுடன், பல்லவா் ஆட்சி வீழ்ச்சிக்கான காரணங்கள் ஆதாரபூா்வமாக, ஆவணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. 

பல்லவா் கால தமிழக அரசியல் சூழல், வைணவா், சமணருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் உள்ளிட்டவை ஆதாரபூா்வமாக விளக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்த நூலானது அனைத்துத் தரப்பினரும் அறிய வேண்டிய ஆதாரபூா்வமான வரலாற்று படைப்பாக உள்ளது.

பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும், முனைவா் ப.செங்கல்வராயன், பக்.160, ரூ.150, எஸ்.எஸ்.பப்ளிகேஷன், தி.நகா், சென்னை.

X
Dinamani
www.dinamani.com