
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ரூ.76 கோடியில் கட்டித் தரப்படும்.
ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு நிலப்பட்டா வழங்கப்படும்.
கூவம் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
ரூ.25 கோடி செலவில் செங்கல்பட்டு சிட்லப்பாக்கம் ஏரி சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.