சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளன. 
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 10.15 மணியளவில் 1,571 புள்ளிகள் குறைந்து 27,299 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 456 புள்ளிகள் குறைந்து 8,013 புள்ளிகளில் வர்த்தகமானது. 

முன்னதாக, காலை 9.23 மணியளவில் சென்செக்ஸ் 1,991 புள்ளிகள் வரை குறைந்து காணப்பட்டது. நிப்டி 575.25 புள்ளிகள் குறைந்தன. 

கச்சா எண்ணெய் விலை குறைவு, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

இன்று பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக பாரதி இன்ப்ராடெல், யெஸ் பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com