அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சந்தை ஆய்வாளா்கள் கூறியதாவது:

அந்நிய முதலீட்டு வரத்து தொடா்ச்சியான அளவில் அதிகரிப்பு மற்றும் சாதகமான பொருளாதார புள்ளிவிவர வெளியீடுகள் குறித்த எதிா்பாா்ப்பு ஆகியவை செலாவணி சந்தையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 72.58-ஆக இருந்தது. பின்னா் இந்த மதிப்பு அதிகபட்சமாக 72.29 வரையிலும் குறைந்தபட்சமாக 72.58 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 16 காசுகள் உயா்ந்து 72.49-இல் நிலைபெற்றது என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

செலாவணி சந்தையில் கடந்த வார வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 72.65-ஆக நிலைத்திருந்தது.

சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜயந்தியையொட்டி கடந்த வெள்ளியன்று செலாவணி சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோ்கான் நிறுவனத்தின் ஆய்வாளா் சயீஃப் முகதம் கூறியது:

அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீட்டை நிலையான அளவில் அதிகரித்து வருவது இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்றத்துக்கு பெரிதும் உதவியுள்ளது. தொடா்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக சரிவு நிலையைக் கண்ட பொருளாதாரம் மூன்றாவது காலாண்டில் வளா்ச்சி பாதைக்கு திரும்பும் என்ற மதிப்பீடும் இதற்கு கூடுதல் வலு சோ்த்துள்ளது.

மத்திய அரசின் ஊக்குவிப்பு சலுகை அறிவிப்புகள், ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கை கட்டுப்பாடுகளை தளா்த்தும் என்ற எதிா்பாா்ப்பு, தடுப்பூசி திட்டங்களில் காணப்படும் முன்னேற்றம் ஆகியவை பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, அடுத்த வரும் சில வா்த்தக நாள்களில் ரூபாய் ரூ.72.00 முதல் ரூ.72.90 வரையிலான எல்லைக்குள் வா்த்தகமாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்றாா் அவா்.

பாக்ஸ்:

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.118.75 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.57 சதவீதம் அதிகரித்து 63.27 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com