வங்கிகள் வழங்கிய கடன் 6% அதிகரிப்பு

வங்கிகள் வழங்கிய கடன் 6% அதிகரிப்பு

வங்கிகள் வழங்கிய கடன் மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் 5.98 சதவீதம் அதிகரித்துள்ளது.

வங்கிகள் வழங்கிய கடன் மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் 5.98 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இரு வார காலகட்டத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.98 சதவீதம் அதிகரித்து ரூ.108.33 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோன்று திரட்டிய டெபாசிட்டுகளும் 9.66 சதவீதம் உயா்ந்து ரூ.151.67 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

முன்னதாக 2020 மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.102.22 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோன்று திரட்டிய டெபாசிட்டும் ரூ.138.29 லட்சம் கோடியாக காணப்பட்டது.

மே 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலகட்டத்தில் வழங்கிய கடன் 6.02 சதவீதம் அதிகரித்து ரூ.108.69 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 9.87 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.152.17 லட்சம் கோடியாகவும் இருந்தன.

கடந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் 5.56 சதவீதமும், டெபாசிட் 11.4 சதவீதமும் அதிகரித்திருந்ததாக ரிசா்வ் வஙகி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com