ஸ்யோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஸியோமி 11 லைட் என்இ 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று(செப்-30) இந்தியாவில் அறிமுகமானது.
தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஸியோமி நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.
இதையும் படிக்க | சாம்சங் ’கேலக்ஸி எஃப்42 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்
ஸியோமி 11 லைட் என்ஈ 5ஜி சிறப்பம்சங்கள் :
*6.55 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை
*ஸ்னாப் டிராகன் 778ஜி பிராசசர்
*அமொல்ட் திரை
* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி
* மெமரி கார்டு வசதி
*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 20 எம்பி செல்பி கேமரா
*4250 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி
* ஆண்டிராய்ட் 11 (மியூ 12.5)
* சி-டைப் , வை பை 6,
ஆரம்ப விலையாக 6ஜிபி+128ஜிபி வகை ரூ.26,999ஆகவும் 8ஜிபி+128ஜிபி ரூ.28,999 என்றும் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அக்.2 முதல் இதன் விற்பனை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸியோமி விற்பனையகங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருகிறது.