80 விமானிகளுக்கு 3 மாதம் ஊதியம் இல்லாத விடுப்பு- ஸ்பைஸ் ஜெட்

குறைந்த கட்டண விமான சேவைகளை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 80 விமானிகளை 3 மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பில் செல்லுமாறு கூறியுள்ளது.
80 விமானிகளுக்கு 3 மாதம் ஊதியம் இல்லாத விடுப்பு- ஸ்பைஸ் ஜெட்

குறைந்த கட்டண விமான சேவைகளை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 80 விமானிகளை 3 மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பில் செல்லுமாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக விளக்கம் அளித்த அந்நிறுவனம், செலவைக் குறைக்க இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான்; எந்த விமானியையும் பணியைவிட்டு அனுப்பவில்லை. கரோனா காலகட்டத்திலும் கூட நிறுவனம் உறுதியாக செயல்பட்டது. விமானிகளை விடுப்பில் அனுப்புவதால் சேவைகளில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முடிவு தொடா்பாக விமானிகள் கூறுகையில், ‘நிறுவனத்தின் நிதிநிலை சரியாக இல்லை என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆனால், திடீரென இப்படியொரு முடிவை அறிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. 3 மாதங்களுக்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்பது தொடா்பாகவும் அச்சம் உள்ளது. இப்போது விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளவா்கள் மீண்டும் பணியில் சோ்க்கப்படுவாா்கள் என்று எந்த உறுதியும் இல்லை’ என்றனா்.

கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ஸ்பைஸ் ஜெட் நஷ்டம் ரூ.784 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டு இதே காலகட்டத்தில் நஷ்டம் ரூ.731 கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com