2.5 கோடி கார்களை தயாரித்து மாருதி சுஸுகி சாதனை

இந்தியாவில் மாருதி சுஸுகி இதுவரை 2.5 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
2.5 கோடி கார்களை தயாரித்து மாருதி சுஸுகி சாதனை

இந்தியாவில் மாருதி சுஸுகி இதுவரை 2.5 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலம் குருகிராமில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதலாவது ஆலையை அமைத்தது. அங்கு முதல் மாடலாக மாருதி 800 கார் தயாரிக்கப்பட்டு தனிநபர் விற்பனைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து, மாருதி சுஸுகி 16 மாடல்களில் கார்களை தயாரித்து வருகிறது. தற்போது, இந்தியா முழுக்க கார்கள் விற்பனையில் மாருதி தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் நம்பிக்கையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை மாருதி சுஸுகி நிறுவனம் 2.5 கோடி கார்களை உற்பத்தி செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டேக்யூச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபா் மாதத்தில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 21 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com