2022-23ஆம் நிதியாண்டில் பால் உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரித்து 23.058 கோடி டன்னாகவும், முட்டை உற்பத்தி 7 சதவிகிதம் அதிகரித்து 13,838 கோடி டன்னாகவும் உயர்ந்துள்ளது.
2022-23ஆம் நிதியாண்டில் பால் உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரிப்பு!


புதுதில்லி: 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரித்து 23.058 கோடி டன்னாகவும், முட்டை உற்பத்தி 7 சதவிகிதம் அதிகரித்து 13,838 கோடி டன்னாகவும், இறைச்சி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 2022-23ல் 5 சதவிகிதம் அதிகரித்து 97.69 லட்சம் டன்னாக உள்ளது.

குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய பால் தின நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார். இந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பானது மார்ச் 2022 முதல் பிப்ரவரி 2023 அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பால் உற்பத்தி 2,305.8 லட்சம் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22ஆம் ஆண்டின் மதிப்பீடுகளை விட 3.83 சதவிகிதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றார் ரூபாலா.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.47 சதவிகிதமாக இருந்தது. இதுவே 2019-20ஆம் ஆண்டில் 5.69 சதவிகிமாக இருந்தது. இது 2020-21ஆம் ஆண்டில் 5.81 சதவிகிதமாகவும், 2021-22 ஆம் ஆண்டில் 5.77 சதவிகிதமாகவும் உள்ளது.

2022-23ஆம் ஆண்டில் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக உத்தரபிரதேசம் 15.72 சதவிகிதமும், ராஜஸ்தான் 14.44 சதவிகிதமும், மத்திய பிரதேசம் 8.73 சதவிகிதமும், குஜராத் 7.49 சதவிகிதமும் இதனையடுத்து ஆந்திரா 6.70 சதவிகிதமாகவும் இருந்தது. அதுவே வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, கர்நாடகா 8.76 சதவிகிதமாகவும் அதனை தொடர்ந்து மேற்கு வங்கம் 8.65 சதவிகிதமாகவும் பதிவாகி உள்ள நிலையில் உத்தரபிரதேசம் 6.99 சதவிகிதமாகவும் பதிவாகி உள்ளது.

2022-23ல் முட்டை உற்பத்தி 13,838 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018-19ஆம் ஆண்டில் 10,380 கோடியிலிருந்து 33.31 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2021-22ஆம் ஆண்டை விட 2022-23ஆம் ஆண்டில் முட்டை உற்பத்தி 6.77 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆந்திரா 20.13 சதவிகிதத்துடன் மிகப்பெரிய முட்டை உற்பத்தியாளராகவும், தமிழ்நாடு 15.58 சதவிகிதமும், தெலுங்கானா 12.77 சதவிகிதமும், மேற்கு வங்கம் 9.94 சதவிகிதமும் பதிவாகி உள்ள நிலையில் கர்நாடகா 6.51 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கம்பளி உற்பத்தி 2022-23 ஆம் ஆண்டில் 2 சதவிகிதம் அதிகரித்து 336.1 லட்சம் கிலோவாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com