தங்கம் விலை பவுனுக்கு ரூ.70 குறைவு!

உலோகங்களின் விலை வீழ்ச்சியடைந்ததன் மத்தியில் தலைநகர் புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.63,300 ஆக வர்த்தகமானது என்று  எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: வெளிநாட்டு சந்தைகளில் உலோகங்களின் விலை வீழ்ச்சியடைந்ததன் மத்தியில் தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.63,300 ஆக வர்த்தகமானது என்று  எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

முந்தைய வர்த்தகத்தில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.63,370 ஆக முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.74,600-ஆக வர்த்தகமானது.

ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸின் கமாடிட்டிகளின் மூத்த ஆய்வாளர் சௌமில் காந்தி தெரிவிக்கையில், தில்லி சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை (24 காரட்) 10 கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.63,300 ஆக வர்த்தகமானது.

சர்வதேச சந்தைகளில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,029 டாலருக்கு வர்த்தகமான நிலையில், அது முந்தைய முடிவிலிருந்து 4 அமெரிக்க டாலர் குறைந்தது வர்த்தகமானது. எனினும் வெள்ளியின் விலையானது அவுன்ஸ் ஒன்றுக்கு 22.29 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com