உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான்.
சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14). சர்க்கரை என்பது நமது உடலுக்கு எரிபொருளாகப் பயன்படுவது. நாம் உண்ணும் அனைத்து உணவிலும் உள்ள சர்க்கரையை உடல் எரித்து உங்களுக்கு ஆற்றலாக வழங்குகிறது. இதுதான் இயற்கை. உடலுக்கு எரிபொருளாக இருக்கக்கூடிய சர்க்கரை எவ்வாறு நோயாக மாறுகிறது?
பசிக்காமல் சாப்பிடுவது; பசித்துச் சாப்பிடாமல் இருப்பது; அவசர அவசரமாக சாப்பிடுவது; வயிறு புடைக்க சாப்பிடுவது; சாப்பிட்ட பிறகு குளிப்பது; சாப்பிட்ட பிறகு வயிறு வீங்கும் அளவுக்கு தண்ணீர் பருகுவது; உணவை சுவைக்காமல் சாப்பிடுவது; உணவை பற்களால் நன்கு அரைக்காமல் சாப்பிடுவது; பால், தேநீர், குளிர்பானம் மற்றும் செயற்கை உணவுகளை சாப்பிடுவது; மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது; இரவு நேரங்களில் உறங்காமல் விழித்திருப்பது; வாயால் மூச்சு விடுவது; குடிப்பழக்கம்; உழைக்காமல் வாழ்வது; அதிக நேரம் குளிர்சாதன அறையில் நேரத்தைச் செலவிடுவது.
மேற்கண்ட விஷயங்களை நாம் செய்யும் போது நாம் உண்ணக்கூடிய உணவானது முழுமையாக ஜீரணம் ஆகாது. அந்த உணவில் இருந்து பெறக்கூடிய சர்க்கரை நம்முடைய உடலில் உள்ள உறுப்புகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு தரமான சர்க்கரையாக இருக்காது. நமது ஜீரண மண்டலத்திலிருந்து ஜீரணமான சர்க்கரை ரத்தத்தில் கலக்கிறது. இவ்வாறு ரத்தத்தில் கலக்கக்கூடிய சர்க்கரையை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.
சர்க்கரை தரமானதா, தரமற்றதா என்பதை உடல் உறுப்புகள் அறிந்து கொள்வதற்கு ஓர் அமைப்பு அவசியம் தேவை. அதற்குப் பெயர்தான் இன்சுலின்; அது உடலில் உள்ள எந்தெந்த சர்க்கரையை குறித்துக் காட்டுகிறதோ, அதை மட்டும் தான் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளும். இதுதான் சர்க்கரையின் தரம் பிரித்தறிந்து உட்கொள்வதற்கு உடல் கையாளும் உத்தி.
நாம் உண்ணும் உணவு முழுமையாக ஜீரணமாகாமல் ரத்தத்தில் கலந்தால், அதைக் குறைப்பதற்கு இன்சுலின் சுரக்காது. இன்சுலின் குறைக்கப்படாத சர்க்கரை உங்கள் ரத்த ஓட்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இதை சிறுநீரகங்கள் அதிகமாக நீர் வடிவில் வெளியேற்றம் செய்யும். இப்படி வெளியேறும் நீர் ஓரளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவே நீரிழிவு என்ற சர்க்கரை நோய். வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு தெளிவான சரியான ஜீரணத்தை உடலுக்கு வழங்கினால் சர்க்கரை நோய் அறவே வராது.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க அல்லது வந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைக்க, எப்போது சாப்பிட்டாலும் முதலில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சாலட்டில் ஆரம்பித்து, அதற்கு அடுத்தபடியாக புரதம் நிறைந்த உணவுகளையும், இறுதியாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். சாலடுகள், அனைத்துக் காய்கறிகளின் ஊட்டச் சத்தையும் உள்ளடக்கிய சிறந்த உணவாகும். அவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துகள் கொண்டவை.
இந்த முறையில் நீங்கள் சாப்பிட ஆரம்பித்தால் 46% ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்க முடியும். இதே உணவு முறை டைப்- 2 சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை 53% குறைக்கும் என்கிறார்கள். நியூயார்க் வெஸ்ட் கார்னெல் மெடிசன் அமைப்பு ஆராய்ச்சியாளர்கள், சாப்பிட்டவுடன் நமது ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிப்பது ஜிஎல்பி-1 என்ற ஹார்மோன்தான்; மேற்கண்ட வகையில் சாப்பிடும்போது ஜிஎல்பி-1 தீவிரம் தவிர்க்கப்படுகிறது என்கிறார்கள்.
சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைக்க உங்கள் உணவில் 55% கார்போஹைட்ரேட் உணவுகளும், 35% புரதம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் கனடா ஆன்டரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இன்சுலின் செயல்பாட்டில் முடக்கம் ஏற்படுகிறது. வளர்சிதை மாற்றம் சரியான முறையில் நடைபெறுவது இல்லை. இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். உணவின் அளவை தினசரி 800 முதல் 1,000 கலோரிகள் என்ற முறையில் சாப்பிடத் தொடங்கினால், சர்க்கரை அளவை எளிதாகக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, ஓடுதல் அல்லது இதுபோன்ற எந்த வேலை செய்தாலும் அது ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். இதன் காரணமாக, சர்க்கரையின் அளவில் உடனடி அதிகரிப்போ குறைவோ இல்லாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு 60 நிமிஷங்கள் கழித்து 5 முதல் 10 நிமிஷங்கள் நடந்தாலே சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
தேவையற்ற மன அழுத்தம் உடலில் தேவையற்ற ஹார்மோன்களை வெளியிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நல்ல தூக்கம் தேவை. ஓர் ஆரோக்கியமான நபர் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கமின்மையால் கிளைசமிக் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு கிளைசமிக் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். எனவே, இரவு ஆரோக்கியமான தூக்கம் அவசியம் என்கிறார்கள்.
பொதுவாக ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போது ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்க காரணமாகிறது. தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உணவின் அளவை தினசரி 800 முதல் 1,000 கலோரிகள் என்ற முறையில் சாப்பிடத் தொடங்கினால், சர்க்கரை அளவை எளிதாகக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, ஓடுதல் அல்லது இதுபோன்ற எந்த வேலை செய்தாலும் அது ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். இதன் காரணமாக, சர்க்கரையின் அளவில் உடனடி அதிகரிப்போ குறைவோ இல்லாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு 60 நிமிஷங்கள் கழித்து 5 முதல் 10 நிமிஷங்கள் நடந்தாலே சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
தேவையற்ற மன அழுத்தம் உடலில் தேவையற்ற ஹார்மோன்களை வெளியிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நல்ல தூக்கம் தேவை. ஓர் ஆரோக்கியமான நபர் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கமின்மையால் கிளைசமிக் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு கிளைசமிக் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். எனவே, இரவு ஆரோக்கியமான தூக்கம் அவசியம் என்கிறார்கள்.
பொதுவாக ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போது ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்க காரணமாகிறது. தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.