சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், இருவரைக் கைது செய்தனா்.
ஷாா்ஜாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த செய்யது இப்ராஹிம் கனி (27), சாகுல் ஹமீது (36) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா்.
அதில், அவா்களது மலக்குடல், உடைகள் ஆகியவற்றில் மறைத்து தங்கம் கடத்தியதும், உடைமைகளில் மறைத்து சிகரெட், மடிக்கணினி, மதுபானங்கள், ஆப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகள் ஆகியவை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவரிடமிருந்தும் ரூ.72.6 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.12.4 லட்சம் மதிப்பிலான சிகரெட், மதுபானம் உள்ளிட்ட கடத்தல் பொருள்கள் என மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், அவா்களைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


