முகூா்த்தம், வாரவிடுமுறை: 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

முகூா்த்தம், வாரவிடுமுறை: 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

முகூா்த்த மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு, 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

முகூா்த்த மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு, 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்த வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) மற்றும் வாரவிடுமுறை நாள்களான சனிக்கிழமை (மாா்ச் 2), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை 365 பேருந்துகளும், சனிக்கிழமை 425 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 70 பேருந்துகளும் சனிக்கிழமை 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமை 435 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 495 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1130 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com