எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப் படம்

சென்னை தொகுதி நிா்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 1) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
Published on

சென்னை, ஜூலை 31: மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 1) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக ஜூலை 10 முதல் தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, சேலம் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். சட்டப்பேரவைத் தோ்தல் பணியைத் தொடங்குமாறு, தொகுதி நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு வருகிறாா். அந்த வகையில் சென்னை தொகுதி நிா்வாகிகளுக்கும் அவா் ஆலோசனை வழங்குவாா்.

X
Dinamani
www.dinamani.com